×

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் மிர்னாள் தாகூர்?

தமிழ் சினிமாவின் முன்னாடி நடிகர்களின் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்த படங்களில் கம்மிட் ஆகி பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ப்ரின்ஸ்” திரைப்படம் தோல்வி அடைந்ததால் அடுத்த படம் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் “அயலான்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும், பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் “சீதா ராமம்” படத்தில் கதாநாயகியாக நடித்த மிர்னாள் தாகூர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் மிர்னாள் தாகூர்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mirnal ,Sivakarthikeyan ,Anbarasan ,Mirnal Tagore ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்