×

எதிர்பார்ப்பதை ஏற்படுத்தியுள்ள “சந்திரமுகி2” படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பி.வாசு இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நாசர், நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்து 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியான “சந்திரமுகி” திரைப்படம் மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் “சந்திரமுகி” திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் பி.வாசு முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் உள்பட பலர் நடிக்கின்றனர்.

‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் எப்போது வெளியாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சந்திரமுகி2” திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

The post எதிர்பார்ப்பதை ஏற்படுத்தியுள்ள “சந்திரமுகி2” படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : P. Vasu ,Vidyasagar ,Rajinikanth ,Prabhu ,Vadivelu ,Nasser ,Nayanthara ,Jyothika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...