×

பிரசாரத்துடன் கொரோனா விழிப்புணர்வு: உடல் நலனுக்கு மாஸ்க் போடுங்க ஊர் நலனுக்கு ஓட்டு போடுங்க; அசத்தும் வேட்பாளர்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சி 6வது வார்டில் பொறியியல் பட்டம் முடித்த 22 வயது இளைஞரான சதீஷ்குமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல்  முதல் தற்போது வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி வலம் வருகிறார். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தனி ஒருவனாக வாக்கு சேகரிக்க செல்லும் சதீஷ்குமார், வாக்கு சீட்டு மாதிரி, திமுக அரசின் சாதனைகள், வார்டிற்கு செய்ய வேண்டிய வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்துடன், கொரோனா விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்குகிறார். முகக்கவசம், கையுறை அணிந்து செல்வதோடு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் அவற்றை வழங்கி, ‘‘உடல் நலத்துடன் வாழ மாஸ்க் போடுங்க, ஊர் நல்லாயிருக்க உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க’’ என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரது இந்த அணுகுமுறை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது….

The post பிரசாரத்துடன் கொரோனா விழிப்புணர்வு: உடல் நலனுக்கு மாஸ்க் போடுங்க ஊர் நலனுக்கு ஓட்டு போடுங்க; அசத்தும் வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Corona ,Sayalkudi ,Satishkumar DMK ,Ramanathapuram District ,Mudukulathur Municipality ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி...