×
Saravana Stores

பாக்டீரியா தொற்று காரணமாக மடோனாவுக்கு தீவிர சிகிச்சை

வாஷிங்டன்: பிரபல பாப் பாடகி மடோனாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பாப் பாடகியான மடோனா (64) ‘செரிஷ்’ என்ற படத்தில் நடித்தபோது, திடீரென்று அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மடோனாவின் மேலாளர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த 24ம் தேதி சனிக்கிழமை மடோனாவுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பல நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அவரது உடல்நிலை வேகமாக குணமடைந்து வருகிறது என்றாலும், இன்னும் அவர் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை சரியில்லாததால் சுற்றுப்பயணம் மற்றும் வணிக பொறுப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமடைவார் என்று நம்புகிறோம். மடோனாவின் புதிய சுற்றுப்பயண தேதி மற்றும் மாற்றப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் வான்கூவர் நகரில், செலிப்ரேஷன் டூர் என்ற பெயரில், வரும் ஜூலை 15 முதல் ஜனவரி 30ம் தேதி வரை உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த மடோனா, திடீரென்று ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாக்டீரியா தொற்று காரணமாக மடோனாவுக்கு தீவிர சிகிச்சை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Madonna ,WASHINGTON ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாலோவீன் தினம் : பயங்கர பேய் உருவங்கள்,...