×

அணைக்கட்டு தாலுகா ஊசூரில் பாழடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு :  அணைக்கட்டு தாலுகா ஊசூரில் பாழடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்  என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அணைக்கட்டு தாலுகா ஊசூர், அத்தியூர், சேக்கனூர், தெள்ளூர், புலிமேடு, பூதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். அவர்களின் தேவைக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. அதில் கிடங்கு மேலாளர், விதை சான்று அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள் உட்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். மேலும், பாழடைந்த கட்டிடம் என்பதால், கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் கட்டிடத்தின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது. இதனால் அந்த அலுவலகம் பூட்டப்பட்டு, அருகில் உள்ள ஊராட்சி சேவை மையத்தில் வேளாண் அலுவலகம் தற்போது இயங்கி வருகிறது.பள்ளி கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலங்கள் உள்பட பாழடைந்த கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு இடித்து அகற்றப்பட்ட நிலையில், இந்த வேளாண் அலுவலக கட்டிடம் மற்றும் இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்று அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இதுகுறித்து ஊசூர் பகுதி விவசாயிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் கடந்த வாரம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு கட்டிடத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். தற்போது ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும் பழுதடைந்ததால் வேறு இடமின்றி ஊராட்சி சேவை மையத்திலே இயங்கி வருகிறது. இரண்டு அலுவலகம் ஒரே கட்டிடத்தில் இயங்கி வருவதால் போதிய இட வசதியில்லாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வேளாண், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊசூரில் பாழடைந்துள்ள துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்து புதியதாக கட்டிடம் அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இயந்திரத்தில் நடவு செய்து அசத்தும் விவசாயிகள் ஊசூர் சுற்றியுள்ள பகுதியில் நெல் நாற்று நடவுக்காக வேளாண் துறை சார்பில் நெல் நடவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்து வழங்கப்படுகிறது, இந்த இயந்திரத்தின் மூலமாகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தாலுகாவிலே ஊசூர் பகுதியில் தான் அதிக அளவில் இயந்திரம் மூலம் நெல் நாற்று  நடவு பணிகளை மேற்கொண்டு விவசாயிகள் அசத்தி வருகின்றனர்….

The post அணைக்கட்டு தாலுகா ஊசூரில் பாழடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Extension ,Usur, ,Damaktu taluk-Farmers ,Damkatu taluk Usur ,Damkatu taluka Usur ,Dinakaran ,
× RELATED பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி