×

திருச்செந்தூரில் இன்று மாசித்திருவிழா 8ம் நாள் அதிகாலையில் வெள்ளை சாத்தியில் சண்முகர் வீதியுலா: பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் இன்று மாசித் திருவிழா 8ம் நாளையொட்டி இன்று அதிகாலையில் வெள்ளை சாத்தியிலும், நண்பகலில் பச்சை சாத்தியிலும் சுவாமி சண்முகர் வீதியுலா வந்தார். இதில் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. திருவிழாவின் 8ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தியில் சண்முகர் எழுந்தருளினார். பின்னர் 8 வீதிகளில் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். பக்தர்கள் பழம், வெற்றிலை பாக்கு சார்த்தி கற்பூரம் காட்டி வழிபட்டனர். மீண்டும் 7.30 மணிக்கு சுவாமி சண்முகர் கோயிலை வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கு பல வகையான அபிசேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணி அளவில் சுவாமி சண்முகர், பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து நாளை (செவ்வாய்) அதிகாலை திருக்கோயிலை வந்தடைகிறார். மாசித் திருவிழாவில் 8ம் திருவிழா முக்கிய திருவிழா என்பதால் திருச்செந்தூரில் இன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்….

The post திருச்செந்தூரில் இன்று மாசித்திருவிழா 8ம் நாள் அதிகாலையில் வெள்ளை சாத்தியில் சண்முகர் வீதியுலா: பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Shanmukhar Veedhiula ,Tiruchendur ,Subramaniaswamy ,Temple ,Masith festival ,
× RELATED மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி:...