×
Saravana Stores

பாத்டப்பில் ஆண் நண்பருடன் மாளவிகா நெருக்கம்: போட்டோ வைரல்

சென்னை: நடிகை மாளவிகா மோகனன், பாத்ரூம் பாத்டப்பில் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இன்ஸ்டாகிராமில் 3.8 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் இவர், எந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டாலும், அது சில மணிநேரங்களிலேயே வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது தன்னுடைய நண்பர் என ஒருவரின் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.

பாத் ரூமில், பாத் டப்பில் அவர் மீது சாய்ந்தபடி, கொஞ்சம் ரொமான்டிக்காக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இருப்பதால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், உங்களின் காதலரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படத்தை வெளியிட்டு, மாளவிகா மோகனன் போட்டுள்ள பதிவில், ‘நட்பு என்பது கனவுகளால் உருவாக்கப்படும் நபர்களை போல். எப்பொழுதும் உங்கள் நம்பிக்கையை பெற்றிருப்பார்கள். உங்கள் மோசமான நாட்களில் உங்களின் பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள், ஒரு நிமிடம் உங்கள் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தால் கூட அதை படிக்கக் கூடிய திறமைசாலிகள். நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உடனே உங்களுக்கு கை கொடுக்க ஓடி வருவார்கள், அப்படி ஒரு நபர் தான் இவர்’ என்று கூறி இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மாளவிகா தற்போது விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும், ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

The post பாத்டப்பில் ஆண் நண்பருடன் மாளவிகா நெருக்கம்: போட்டோ வைரல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Malavika Mohanan ,Malavika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED படம் ஓடாவிட்டால் நடிகைகளை குறை சொல்கிறார்கள்: மாளவிகா மோகனன் வருத்தம்