×

ஐபிஎல் 15வது சீசன் மெகா ஏலம் இஷான் கிஷனுக்கு ரூ.15.25 கோடி: மும்பை அணி வாங்கியது

பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் (23 வயது) அதிகபட்சமாக ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட 2வது இந்திய வீரர் என்ற பெருமை இஷானுக்கு கிடைத்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் என 2 அணிகள் இணைந்துள்ள நிலையில், மொத்தம் 10 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக மெகா ஏலம் நடத்தப்படுகிறது.பெங்களூருவில் நேற்று நடந்த முதல் நாள் ஏலத்தில், 590 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய கடும் போட்டி நிலவியது. 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்களில் இருந்து தங்கள் அணிக்கு தேவையான வீரர்களைத் தேர்வு செய்து ஏலத்தில் எடுக்க, அணி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அடங்கிய குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்றனர். நட்சத்திர வீரர்கள் அஷ்வின், போல்ட், வார்னர் உள்பட 48 பேருக்கு அடிப்படை  விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  ரூ.1.5 கோடி பட்டியலில்  வாஷிங்டன் சுந்தர்,  ஹெட்மயர் உள்பட  20 வீரர்களும், ரூ.1 கோடி பிரிவில் 34 வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம், ரூ.20 லட்சமாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப் பந்துவீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள் என தனித்திறனுக்கு ஏற்ப வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். விக்கெட் கீப்பரும், இடது கை பேட்ஸ்மேனுமான இஷான் கிஷனை வாங்க மும்பை, ஐதராபாத், குஜராத், பஞ்சாப் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஏற்கனவே தங்கள் அணிக்காக விளையாடி, மெகா ஏலத்துக்கு முன்பாக விடுவிக்கப்பட்டிருந்த இஷான் கிஷனை மீண்டும் வாங்க உறுதியுடன் இருந்த மும்பை அணி கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் ரூ.15.25 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது. ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட 2வது இந்திய வீரர் என்ற பெருமை கிஷனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, 2015 சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டதே அதிகபட்சமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வீரரை ரூ.10 கோடிக்கும் அதிகமாக கொடுத்து வாங்குவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 2011 சீசனில் ரோகித் ஷர்மாவை அந்த அணி ரூ.9.2 கோடிக்கு வாங்கியிருந்தது. 2018ல் ரூ.6.4 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்ட இஷான், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2020 ஐபிஎல் சீசனில் அவர் அதிகபட்சமாக 30 சிக்சர்களை விளாசி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.மெகா ஏலம் 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. * மயங்கி விழுந்தார் எட்மீட்ஸ்ஐபிஎல் ஏலத்தை 2019ம் ஆண்டு முதல் பிரிட்டனைச் சேர்ந்த ஹியூ எட்மீட்ஸ் (63) நடத்தி வருகிறார். சர்வதேச அளவில் ஏலம் நடத்துவதில் 36 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பெங்களூருவில் நேற்று மெகா ஏலத்தை நடத்திய இவர், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ஏலம் விட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அதனால் ஏலம் நிறுத்தப்பட்டு, எட்மீட்ஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் எட்மீட்சே ஏலத்தை தொடர்ந்து நடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் மாலை 3.30 மணிக்கு மீண்டும் தொடங்கிய ஏலத்தை தொலைக்காட்சி தொகுப்பாளரும் வர்ணனையாளருமான சாரு ஷர்மா ஏலத்தை நடத்தினார். இவர் புரோ கபடி தொடரின் இயக்குனராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. * சன்ரைசர்ஸ் அணியில் நிகோலஸ் பூரன்வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான நிகோலஸ் பூரன் (26 வயது), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். பூரனுக்கான அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இவரை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கடுமையாக போட்டி போட்டது. எனினும், சன்ரைசர்ஸ் மிக உறுதியாக தொகையை தொடர்ந்து உயர்த்தி அணியில் இணைத்துக் கொண்டது. * ஷாருக் கானுக்கு ஜாக்பாட்சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஷாருக் கானின் (26 வயது) அடிப்படை விலை ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இவரை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிட்டன. மூன்று அணிகளுமே மாறி மாறி விலையை உயர்த்திக் கொண்டே போனதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. தொடக்கத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் மட்டுமே தொகையை உயர்த்தி ஆர்வம் காட்டிய நிலையில், இடையில் புகுந்து விளையாடிய பஞ்சாப் குழு ரூ.9 கோடிக்கு ஷாருக் கானை வாங்கியது. சிஎஸ்கே அணி ரூ.8.75 கோடி வரை தர முன்வந்தாலும், ஷாருக்கை வசப்படுத்துவதில் இறுதி வெற்றி பஞ்சாப் அணிக்கே கிடைத்தது.* போணியாகாத நட்சத்திரங்கள்!ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக அனுபவம் இல்லாத, சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத இளம் வீரர்களை ஏலம் எடுக்க அணிகள் அதிக ஆர்வம் செலுத்தின. அதே சமயம், பிரபல வீரர்களான சுரேஷ் ரெய்னா, விரித்திமான் சாஹா, உமேஷ் யாதவ், அமித் மிஷ்ரா (இந்தியா), ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ வேடு (ஆஸி.), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்), டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர், ஆடம் ஸம்பா (ஆஸி.), சாம் பில்லிங்ஸ், அடில் ரஷீத் (இங்கி.) ஆகியோரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. ஏலத்தின் 2வது மற்றும் கடைசி நாளான இன்று இவர்களை எந்த அணியாவது வாங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.* சன்ரைசர்ஸ் படைமுதல் நாள் ஏலத்தின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்: வாஷிங்டன் சுந்தர், நிகோலஸ் பூரன், டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, ஷ்ரேயாஸ் கோபால், ஜே.சுசித். தக்கவைப்பு: வில்லியம்சன், உம்ரன் மாலிக், அப்துல் சமத்.* ஒரே அணியில் எதிரிகள்!உள்ளூர் போட்டிகளில் குஜராத்தின் பரோடா அணிக்காக களமிறங்கிய க்ருணால் பாண்டியா, தீபக் ஹூடா இருவருக்கும் ஆகாது. வாய்த்தகராறு, கைகலப்பு வரை நீண்ட சண்டையில், குஜராத் கிரிக்கெட் சங்கம் பாண்டியாவுக்கு சப்போர்ட் செய்ய, அணியில் இருந்தே விலகினார் ஹூடா. அதனால் வேறு அணிக்காக சையத் முஷ்டாக் உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் தீபக் விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்று நடந்த ஏலத்தில் இருவரையும் புதிய அணியான லக்னோ ஏலத்தில் எடுத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளது.* ஐஎஸ்எல் புள்ளி பட்டியல் ரேங்க்    அணி    போட்டி    வெற்றி    டிரா    தோல்வி    புள்ளி1    ஐதராபாத் எப்சி    16    8    5    3    292    ஏடிகே மோகன் பகான்    14    7    5    2    263    ஜாம்ஷெட்பூர் எப்சி    14    7    4    3    254    பெங்களூரு எப்சி    16    6    5    5    235    கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி    14    6    5    3    236    மும்பை சிட்டி எப்சி    14    6    4    4    227    ஒடிஷா எப்சி    15    6    3    6    218    சென்னையின் எப்சி    16    5    4    7    199    எப்சி கோவா    16    4    6    6    1810    எஸ்சி ஈஸ்ட் பெங்கால்    16    1    7    8    1011    நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி    17    2    4    11    10* முதல் நாள் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்எண்    வீரர்    அணி    அடிப்படை விலை    ஏல தொகை1    ஷிகர் தவான்    பஞ்சாப் கிங்ஸ்    ரூ.2 கோடி    ரூ.8.25 கோடி2    ஆர்.அஷ்வின்    ராஜஸ்தான் ராயல்ஸ்    ரூ.2 கோடி    ரூ.5 கோடி3    பேட் கம்மின்ஸ்    நைட் ரைடர்ஸ்    ரூ.2 கோடி    ரூ.7.25 கோடி4    காகிசோ ரபாடா    பஞ்சாப் கிங்ஸ்    ரூ.2 கோடி    ரூ.9.25 கோடி5    டிரென்ட் போல்ட்    ராஜஸ்தான் ராயல்ஸ்    ரூ.2 கோடி    ரூ.8 கோடி6    ஷ்ரேயாஸ் அய்யர்    நைட் ரைடர்ஸ்    ரூ.2 கோடி    ரூ.12.25 கோடி7    முகமது ஷமி    குஜராத் டைட்டன்ஸ்    ரூ.2 கோடி    ரூ.6.25 கோடி8    பேப் டு பிளெஸ்ஸி    ராயல் சேலஞ்சர்ஸ்    ரூ.2 கோடி    ரூ.7 கோடி9    குவின்டன் டி காக்    லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்    ரூ.2 கோடி    ரூ.6.75 கோடி10    டேவிட் வார்னர்    டெல்லி கேப்பிடல்ஸ்    ரூ.2 கோடி    ரூ.6.25 கோடி11    மணிஷ் பாண்டே    லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்    ரூ.1 கோடி    ரூ.4.6 கோடி12    ஷிம்ரோன் ஹெட்மயர்    ராஜஸ்தான் ராயல்ஸ்    ரூ.1.5 கோடி    ரூ.8.5 கோடி13    ராபின் உத்தப்பா    சென்னை சூப்பர் கிங்ஸ்    ரூ.2 கோடி    ரூ.2 கோடி14    ஜேசன் ராய்    குஜராத் டைட்டன்ஸ்    ரூ.2 கோடி    ரூ.2 கோடி15    தேவ்தத் படிக்கல்    ராஜஸ்தான் ராயல்ஸ்    ரூ.2 கோடி    ரூ.7.75 கோடி16    டுவைன் பிராவோ    சென்னை சூப்பர் கிங்ஸ்    ரூ.2 கோடி    ரூ.4.4 கோடி17    நிதிஷ் ராணா    நைட் ரைடர்ஸ்    ரூ.1 கோடி    ரூ.8 கோடி18    ஜேசன் ஹோல்டர்    லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்    ரூ.1.5 கோடி    ரூ.8.75 கோடி19    ஹர்ஷல் படேல்    ராயல் சேலஞ்சர்ஸ்    ரூ.2 கோடி    ரூ.10.75 கோடி20    தீபக் ஹூடா    லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்    ரூ.75 லட்சம்    ரூ.5.75 கோடி21    வனிந்து ஹசரங்கா    ராயல் சேலஞ்சர்ஸ்    ரூ.1 கோடி    ரூ.10.75 கோடி22    வாஷிங்டன் சுந்தர்    சன்ரைசர்ஸ் ஐதராபாத்    ரூ.1.5 கோடி    ரூ.8.75 கோடி23    க்ருனால் பாண்டியா    லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்    ரூ.2 கோடி    ரூ.8.25 கோடி24    மிட்செல் மார்ஷ்    டெல்லி கேப்பிடல்ஸ்    ரூ.2 கோடி    ரூ.6.5 கோடி25    அம்பத்தி ராயுடு    சென்னை சூப்பர் கிங்ஸ்    ரூ.2 கோடி    ரூ.6.75 கோடி26    இஷான் கிஷன்    மும்பை இந்தியன்ஸ்    ரூ.2 கோடி    ரூ.15.25 கோடி27    ஜானி பேர்ஸ்டோ    பஞ்சாப் கிங்ஸ்    ரூ.1.5 கோடி    ரூ.6.75 கோடி28    தினேஷ் கார்த்திக்    ராயல் சேலஞ்சர்ஸ்    ரூ.2 கோடி    ரூ.5.5 கோடி29    நிகோலஸ் பூரன்    சன்ரைசர்ஸ் ஐதராபாத்    ரூ.1.5 கோடி    ரூ.10.75 கோடி30    டி.நடராஜன்    சன்ரைசர்ஸ் ஐதராபாத்    ரூ.1 கோடி    ரூ.4 கோடி31    தீபக் சாஹர்    சென்னை சூப்பர் கிங்ஸ்    ரூ.2 கோடி    ரூ.14 கோடி32    பிரசித் கிருஷ்ணா    ராஜஸ்தான் ராயல்ஸ்    ரூ.1 கோடி    ரூ.10 கோடி33    லோக்கி பெர்குசன்    குஜராத் டைட்டன்ஸ்    ரூ.2 கோடி    ரூ.10 கோடி34    ஜோஷ் ஹேசல்வுட்    ராயல் சேலஞ்சர்ஸ்    ரூ.2 கோடி    ரூ.7.75 கோடி35    மார்க் வுட்    லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்    ரூ.2 கோடி    ரூ.7.5 கோடி36    புவனேஷ்வர் குமார்    சன்ரைசர்ஸ் ஐதராபாத்    ரூ.2 கோடி    ரூ.4.2 கோடி37    ஷர்துல் தாகூர்    டெல்லி கேப்பிடல்ஸ்    ரூ.2 கோடி    ரூ.10.75 கோடி38    முஸ்டாபிசுர் ரகுமான்    டெல்லி கேப்பிடல்ஸ்    ரூ.2 கோடி    ரூ.2 கோடி39    குல்தீப் யாதவ்    டெல்லி கேப்பிடல்ஸ்    ரூ.1 கோடி    ரூ.2 கோடி40    ராகுல் சாஹர்    பஞ்சாப் கிங்ஸ்    ரூ.75 லட்சம்    ரூ.5.25 கோடி41    யஜ்வேந்திர சாஹல்    ராஜஸ்தான் ராயல்ஸ்    ரூ.2 கோடி    ரூ.6.5 கோடி42    பிரியம் கார்க்    சன்ரைசர்ஸ் ஐதராபாத்    ரூ.20 லட்சம்    ரூ.20 லட்சம்43    அபினவ் மனோகர்    குஜராத் டைட்டன்ஸ்    ரூ.20 லட்சம்    ரூ.2.6 கோடி44    டிவால்ட் புரூவிஸ்    மும்பை இந்தியன்ஸ்    ரூ.20 லட்சம்    ரூ.3 கோடி45    அஷ்வின் ஹெப்பார்    டெல்லி கேப்பிடல்ஸ்    ரூ.20 லட்சம்    ரூ.20 லட்சம்46    ராகுல் திரிபாதி    சன்ரைசர்ஸ் ஐதராபாத்    ரூ.40 லட்சம்    ரூ.ரூ.8.5 கோடி47    ரயன் பராக்    ராஜஸ்தான் ராயல்ஸ்    ரூ.30 லட்சம்    ரூ.3.8 கோடி48    அபிஷேக் ஷர்மா    சன்ரைசர்ஸ் ஐதராபாத்    ரூ.20 லட்சம்    ரூ.6.5 கோடி49    சர்பராஸ் கான்    டெல்லி கேப்பிடல்ஸ்    ரூ.20 லட்சம்    ரூ.20 லட்சம்50    ஷாருக் கான்    பஞ்சாப் கிங்ஸ்    ரூ.40 லட்சம்    ரூ.9 கோடி(முதல் நாளில் மொத்தம் 74 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்)…

The post ஐபிஎல் 15வது சீசன் மெகா ஏலம் இஷான் கிஷனுக்கு ரூ.15.25 கோடி: மும்பை அணி வாங்கியது appeared first on Dinakaran.

Tags : IPL Season ,Ishan Kishan ,Mumbai ,Bengaluru ,IPL T20 ,IPL 15th ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...