×

கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி அணி போட்டி பிப்.27ல் இயக்குனர் சங்க தேர்தல்

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. சங்கத்தில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என 2 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் 27ம் தேதி சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என்றும், அன்று மாலையே தேர்தல் முடிவு கள் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணை தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் தனித்தனி அணி சார்பில் போட்டியிடுகின்றனர். தற்போது கே.பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராக பொறுப்பு வகிக்கிறார். …

The post கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி அணி போட்டி பிப்.27ல் இயக்குனர் சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Tags : K. Bhagyaraj ,RK Selvamani ,Chennai ,Tamil Nadu Film Directors Association ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...