×

திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக பூத் சிலிப் விநியோகம்

திருவள்ளூர்: மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 170 ஆண்களும், 3 லட்சத்து 78 ஆயிரத்து 313 பெண்களும், 158 மூன்றாம் பாலினத்தவர் என 7 லட்சத்து 45 ஆயிரத்து 634 பேர் வாக்காளிக்க உள்ளனர். இதில் திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டில் 51 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 25 ஆயிரத்து 28 ஆண் வாக்காளர்களும், 26 ஆயிரத்து 425 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 6 வாக்காளர்கள் என 51 ஆயிரத்து 459 பேர் வாக்களிக்க உள்ளனர். அவர்களுக்கு திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் மூலமாக 27 வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், வரிசை எண், பாகம் எண், வார்டு எண் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக இருக்கும். வரும் 19ம் தேதி நடைபெறும் நகர்ப்புற தேர்தலில் இந்த சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அரசு அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். தொடர்ந்து 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக பூத் சிலிப் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...