×

தற்காப்பு கலைகளை மையப்படுத்திய ஆர் டி எக்ஸ்

கொச்சி: மலையாள திரையுலகின் இளம் நடிகர்களான ஷேன் நிகம், நீரஜ் மாதவ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஆர் டி எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் தயாராகி இருக்கிறது ‘ஆர் டி எக்ஸ்’. இதில் பாபு ஆண்டனி, லால், ஐமா ரோஸ்மி செபாஸ்டியன், பைஜு சந்தோஷ், மகிமா நம்பியார், மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், சபாஷ் ரஷீத் மற்றும் ஆகாஷ் சுகுமாரன் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். அலெக்ஸ் ஜே. புலிக்கல் ஒளிப்பதிவு செய்திருக்கும் திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். தற்காப்பு கலைகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் படத்திற்கு தேசிய விருது பெற்ற அன்பறிவு, சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். சமன் சாக்கோ படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை ஜோசப் நெல்லிக்கல் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் திரைப்படத்தை வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சோபியா பால் தயாரித்திருக்கிறார்.

The post தற்காப்பு கலைகளை மையப்படுத்திய ஆர் டி எக்ஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kochi ,Shane Nigam ,Neeraj Madhav ,Antony Varghese ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...