×

மயில் இறகில் முதல்வர் படம்

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சபரிநாதன் (38). இவர் மயிலிறகை கொண்டு கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவ படங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். இதுகுறித்து சபரிநாதன் கூறுகையில், ‘தேசிய பறவை மயிலை மையப்படுத்தி, அதன் இறகு மூலம் ஓவியம் வரைய வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது கலைஞர் நினைவாகவும், தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தையும் வித்தியாசமான முறையில் மயிலிறகு மூலம் ஓவியம் வரைந்துள்ளேன். படம் வரைந்து முடிக்க 8 மணி நேரம் ஆனது’ என்றார்….

The post மயில் இறகில் முதல்வர் படம் appeared first on Dinakaran.

Tags : Peacock Feathers ,Kujiliamparai ,Sabrinathan ,Government Higher Secondary School ,Kujiliyamaparai ,Dindigul ,Peacock ,Chief Minister ,Dinakaran ,
× RELATED குஜிலியம்பாறை ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.59...