×

வேட்பாளருக்கு ஓட்டு கேட்பதற்கு பதிலாக அதிமுகவில் யார் தலைவர் என்ற சண்டைக்கே நேரம் சரியாகி விடும்: கடையநல்லூரில் அமைச்சர் பேச்சு

கடையநல்லூர்: கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது: கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதிமுகவில் வேட்பாளருக்கு ஓட்டு கேட்பதற்கு பதிலாக, அதிமுகவில் யார் தலைவர் என்று சண்டை போடுவதற்கே நேரம் சரியாக போய்விடும். நமக்காக, தமிழ் மக்களுக்காக பாடுபடக்கூடிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் என்றார்….

The post வேட்பாளருக்கு ஓட்டு கேட்பதற்கு பதிலாக அதிமுகவில் யார் தலைவர் என்ற சண்டைக்கே நேரம் சரியாகி விடும்: கடையநல்லூரில் அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : kadayanallur ,Kadyanallur ,Introductory Meeting of ,and Candidates ,Tenkasi ,Northern ,District ,Kaditanallur ,
× RELATED புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை