×

ஆபரேஷன் நடந்தபோது தனது பாடலை பாடிய ரசிகையை நேரில் சந்தித்த இளையராஜா

சென்னை: சென்னையை சேர்ந்த கர்நாடக இசை ஆசிரியை சீதாலட்சுமி. அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது. அவருக்கு ஆபரேஷன் நடக்கும் பகுதியில் மட்டும் மரத்துப்போகும் மருந்து கொடுத்துள்ளனர். இதனால், ஆபரேஷன் நடந்தபோது அவர் சுயநினை வுடன் இருந்திருக்கிறார். ஆனால், அதிக பதற்றத்துடன் இருந்துள்ளார். உடனே தனது பதற்றத்தைப் போக்குவதற்காக, ‘கேளடி கண்மணி’ படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘கற்பூர பொம்மை ஒன்று’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இந்தப் பாடல் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இதை பாடி என் குழந்தைகளை தூங்க வைப்பேன். எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்படும்போது இதை பாடுவேன். எனக்கு நுரையீரல் பிரச்னை இருந்தது. மூச்சு திணறும்போது இதை பாடினால் சரியாகிவிடும். காரணம், நுரையீரல் செயல்பாடு சீராக இருந்தால் மட்டுமே இப்பாடலை பாட முடியும்’ என்றார். இவ்விஷயத்தை அறிந்த இசை அமைப்பாளர் இளையராஜா, உடனே சீதாலட்சுமியை நேரில் வரவழைத்து தன் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்….

The post ஆபரேஷன் நடந்தபோது தனது பாடலை பாடிய ரசிகையை நேரில் சந்தித்த இளையராஜா appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,Chennai ,Seethalakshmi ,
× RELATED சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு...