×

மதச்சார்பின்மையை ஊக்குவிக்க பள்ளி, கல்லூரிகளில் பொதுவான ஆடை: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பொது ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடகா பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், அது தொடர்பான வழக்கை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட மத உடைகள் அணிய தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் நிகில் உபாத்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், ‘பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பொதுவான ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அப்போதுதான், மாணவர்களிடையே சகோதரத்துவம், ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு, மதச்சார்பின்மையை ஊக்குவித்து ஜனநாயகத்தை காக்க முடியும். இவற்றை பரிந்துரைக்கும் அறிக்கையை அடுத்த 3 மாதங்களில் இந்திய சட்ட ஆணையம் வெளியிட உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. * வெளிநாடுகளுக்கு கண்டிப்புஹிஜாப் பிரச்னையில் பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் ரஷாத் ஹுசைன் ‘ஹிஜாப் அணிய தடை விதிப்பது மத சுதந்திரத்தை மீறுகிறது. இஸ்லாமிய பெண்கள், சிறுமிகளை களங்கப்படுத்துகிறது,’ என டிவிட்டரில் தெரிவித்தார். இது பற்றி ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி  நேற்று கூறுகையி்ல்,  ‘இந்தியாவை நன்றாக அறிந்தவர்கள், உண்மையை நிலையை அறிவார்கள். இந்த விவகாரம் கர்நாடகா உயர் நீதிமன்றதை்தின் விசாரணையில் இருக்கிறது. நாட்டின் அரசியலமைப்பு ஜனநாயகம் நெறிமுறைகளின்படி இந்த பிரச்னையை நாங்களே தீர்த்துக் கொள்வோம்,’ என கூறியுள்ளார்….

The post மதச்சார்பின்மையை ஊக்குவிக்க பள்ளி, கல்லூரிகளில் பொதுவான ஆடை: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...