×

கீழடியில் ரூ.11.33 கோடியில் அகழ் வைப்பகம்: கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கீழடியில் கொந்தகை வருவாய் குரூப்பில் உள்ள இடத்தில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பக பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேற்று ஆய்வு செய்தார். கீழடியை சுற்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொன்மையான உலோகப் பொருட்கள் மற்றும் கலைநயம் வாய்ந்த பொருட்களை அறிஞர்கள், சான்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்வதற்காக கீழடியில் சர்வதேச தரத்துடன் அகழ் வைப்பகம் 39,910 சதுர அடியில் ரூ.11.33 கோடி மதிப்பீட்டில் கட்டட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை ஆய்வுசெய்த கலெக்டர் விரைவில் பணிகளை முடிக்க வலியுறுத்தினார். உடன் செயற்பொறியாளர் மணிகண்டன் உட்பட அலுவலர்கள் இருந்தனர்….

The post கீழடியில் ரூ.11.33 கோடியில் அகழ் வைப்பகம்: கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupuvanam ,Tamil ,Nadu ,Sivaganga District ,Akaram ,Kondagai ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...