×

ஜெ., அனுதாபி சைக்கிள் வடிவேலு திமுகவுக்காக பிரசாரம்

திருச்செங்கோடு: சைக்கிள் வடிவேலு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் திருச்செங்கோடு நகரை சேர்ந்தவர் வடிவேலு. ஓட்டலில் பணியாற்றி வரும் இவர், கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டம்  எங்கு  நடந்தாலும், தலையில் இரட்டைஇலை சின்னம் பொருத்திய தொப்பியுடன் வலம் வருவார். ஜெயலலிதாவுக்கு நேரடியாக தெரியும் அளவுக்கு பிரபலமான தொண்டராக அதிமுகவில் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் அதிமுகவை விட்டு விலகி, திமுகவில் இணைந்துள்ளார். திருச்செங்கோடு நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தனது தலையில் உதயசூரியன் சின்னம் பொருத்திக்கொண்டு, கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன், மொபெட்டில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். …

The post ஜெ., அனுதாபி சைக்கிள் வடிவேலு திமுகவுக்காக பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Anadhaphi Cycle Vativelu Dimuga ,Vativelu ,Thiruchengod ,Cycle Vativelu ,J. ,Vidyvelu Divisa ,
× RELATED கடத்தல் படத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்