×

பிருத்விராஜ் காயம்: படப்பிடிப்பில் விபத்து

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு மலையாள படப்பிடிப்பில் சண்டை காட்சியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் பிரித்விராஜின் காலில் காயம் ஏற்பட்டது. தமிழில் பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் பிருத்விராஜ். இவர், விலாயத் புத்தா என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் மறையூரில் கடந்த சில நாளாக நடந்து வருகிறது. நேற்று மறையூர் பஸ் நிலையத்தில் ஒரு பஸ்சில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பிரித்விராஜ் எதிர்பாராதமாக தவறி கீழே விழுந்தார். அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post பிருத்விராஜ் காயம்: படப்பிடிப்பில் விபத்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bhirudwiraj ,Thiruvananthapuram ,Brithwiraj ,Kerala ,Idukar ,Buddha ,BirudViraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...