×

டெல்டாவில் 2வது நாளாக பலத்த மழை 2.50 லட்சம் ஏக்கரில் சம்பா அறுவடை பாதிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சி: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. நாகையில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்கிறது. நள்ளிரவும் மழை நீடித்தது.  திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரையும், பின்னர் நள்ளிரவும் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று  மதியம் 12 மணி வரை நீடித்த கனமழை தொடர்ந்து விட்டு விட்டு தூறல் மழையாக பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மாலை மற்றும் நள்ளிரவு விட்டுவிட்டு மழை பெய்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாலை மற்றும் நள்ளிரவு மழை பெய்தது. திருச்சியில் நேற்று காலை முதல் இரவு வரை மழை பெய்தது. விடிய விடிய பல இடங்களில் தூறிக்கொண்டே இருந்தது. அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. திருவாரூரில் பல இடங்களில் அறுவடைக்கு தயாரான 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து விட்டது. வயல்களில் சேறாக இருப்பதால் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்டாவில் மொத்தமாக சுமார் 2.50 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் மழை நீர் தேங்கி உள்ளது. அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்….

The post டெல்டாவில் 2வது நாளாக பலத்த மழை 2.50 லட்சம் ஏக்கரில் சம்பா அறுவடை பாதிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Delta ,samba harvest ,Trichy ,Thanjavur ,Tiruvarur ,Nagai ,Mayiladuthurai ,Cuddalore ,Pudukottai ,samba ,
× RELATED டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக மழை;...