×

மீண்டும் வரலாறு திரும்புமா: ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா

* இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை  135 ஒரு நாள் ஆட்டங்களில் மோதி உள்ளன. அவற்றில் இந்தியா 66, வெ.இண்டீஸ்  63 ஆட்டங்களில் வென்றுள்ளன.  மேலும் 2 ஆட்டங்கள் சரிநிகர் சமனிலும்(டை), 4 ஆட்டங்கள் முடிவு எட்டாமலும் முடிந்தன.*  பிசிசிஐ நலநிதி தொடர் உட்பட 21 ஒருநாள் தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. அவற்றில்  நடப்புத் தொடர் உட்பட 13 தொடர்களை இந்தியாவும், 7 தொடர்களை வெ.இண்டீசும் கைப்பற்றியுள்ளன.* இந்த 2 அணிகளும் 1975ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து நேருக்கு நேர் மோதிகின்றன. முதல் வெற்றி 1982ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு கிடைத்தது.* இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்களில் 1989ம் ஆண்டு வரை முதல் 5 தொடர்களையும் வெ.இண்டீஸ் தான் கைப்பற்றியது.  இந்தியா முதல் தொடரை 1994/95ல் சொந்த மண்ணில்தான் வசப்படுத்தியது.* இந்த இரண்டு அணிகளும் 2009ம் ஆண்டு முதல் நடப்புத் தொடர் வரை நடந்த 11 தொடர்களிலும் இந்தியாதான் வென்றுள்ளது. இந்தியா 2019ம் ஆண்டு வெ.இண்டீசில் நடந்த தொடரில்  முதல் முறையாக ஒயிட் வாஷ்  செய்தது. இன்றைய ஆட்டத்தில் வென்றால் இந்தியா 2வது முறையாக வெ.இண்டீசை ஒயிட் வாஷ் செய்த வரலாறு மீண்டும் திரும்பும்….

The post மீண்டும் வரலாறு திரும்புமா: ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா appeared first on Dinakaran.

Tags : White Wash India ,India ,West Indies ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...