×

லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையை படமாக்க 3 டைரக்டர்கள் போட்டி

மும்பை: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 6ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கையை தழுவி பல்வேறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இதை தழுவி படம் எடுக்க சில ஆண்டுகளுக்கு முன் சஞ்சய் லீலா பன்சாலி முயன்றார். சில காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது லதாவின் மறைவுக்கு பிறகு, மீண்டும் அந்த திட்டத்தை அவர் கையில் எடுத்திருக்கிறார். அதே சமயம், இயக்குனர்கள் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, ஆனந்த் எல்.ராய் ஆகியோரும் லதாவின் வாழ்க்கையை படமாக்க விரும்புவதாக அறிவித்துள்ளனர். இதனால் அவரது கதையை யார் படமாக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. லதா மங்கேஷ்கரின் குடும்பத்தார், யாருக்கு அனுமதி தருகிறார்களோ அவர்கள்தான் இந்த படத்தை எடுக்க முடியும்….

The post லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையை படமாக்க 3 டைரக்டர்கள் போட்டி appeared first on Dinakaran.

Tags : Lata Mangeshkar ,Mumbai ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு