×

சடன் பிரேக் போட்டதால் டிப்பர் லாரி மீது மாநகர பஸ் மோதி விபத்து

* 25 பயணிகள் படுகாயம் * லாரி டிரைவருக்கு வலைஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென பிரேக் பிடித்து நின்ற டிப்பர் லாரி மீது மாநகர பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் உள்பட 25க்கு மேற்பட்டோர் படுகாயமடைந் தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மாநகர பஸ் (தஎ 583) இயக்கப்படுகிறது. இந்த பஸ் வண்டலூர் – வாலாஜாபாத் சாலை வழியே, மண்ணிவாக்கம்,  கரசங்கால், படப்பை, ஒரகடம் பகுதி வழியாக  பெரும்புதூர் செல்லும். இந்நிலையில், நேற்று காலை தாம்பரத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் (தஎ 583) புறப்பட்டது. டிரைவர் வெங்கடேசன் ஓட்டினார்.கரசங்கால் எம்ஜிஆர் நகர் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரி திடீரென சடன் பிரேக் பிடித்து நின்றது. உடனே பஸ் டிரைவர் வெங்கடேசன் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டிப்பர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதனால், பஸ்சின் பின்னால் வந்த கார், பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில், டிரைவர் உள்பட, 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும், நொறுங்கிய பஸ்சின் முன்பக்க படிக்கட்டின் வழி, இயங்கவில்லை. இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, படுகாயமடைந்த டிரைவர் உள்பட 25 பேரையும் இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்டனர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிவிட்டார்.தகவலறிந்து மணிமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 25 பேரையும் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்தில் சேதமான 2 வாகனங்களையும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்….

The post சடன் பிரேக் போட்டதால் டிப்பர் லாரி மீது மாநகர பஸ் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Tipper ,Vhasripurudur ,Sripurudpur ,Lorry ,Dinakaran ,
× RELATED கிராவல் மண்ணை அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்: தாசில்தார் நடவடிக்கை