×

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்பி உத்தரவு

திருவள்ளூர்: திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் 25 காவல் நிலையங்கள் உள்ளன.  மாவட்டத்தில் மொத்தம் 94 பேர் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று  துப்பாக்கிகள் வைத்துள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளவர்கள் தங்களது துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் அனுமதி பெற்ற 94 பேரில் 80 பேர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். மேலும் 14 பேர் வங்கி பாதுகாப்புக்காக வைத்துள்ளனர்.114 வாக்குச்சாவடி மையம் பதட்டமானவை:திருவள்ளூர் காவல் மாவட்டம் உள்ள திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி நகராட்சிகளிலும் ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிபூண்டி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் மொத்தம் 200 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,100 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 114 பதட்டமான வாக்குச்சாவடிகளில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பிரச்னைகள் உள்ளதாக அடையாளம் காணப்படும் இடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது….

The post உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : SP ,Thiruvallur ,Thiruvallur District ,Dinakaran ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அடிப்படை...