×

3 பெண்களிடம் செயின் பறிப்பு

ஆவடி: ஆவடியை அடுத்த அண்ணனூர், தேவி நகர், சிவகாமி தெருவை சேர்ந்தவர்  பன்னீர்செல்வம். இவரது மனைவி லதா (60). இந்நிலையில், நேற்று காலை லதா வீட்டில் தனியாக இருந்தார்.  அப்போது, சுமார் 30வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டுக்குள் வந்து அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.  இதே போல், ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ். மனைவி சுலோச்சனா (57). இவர் நேற்று முன்தினம் ரேஷன் கடைக்கு .சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். இவர், அண்ணனூர் ரயில்வே கேட் அருகே வந்த போது, ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்து சுலோச்சனா கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினைபறித்து கொண்டு தப்பி சென்றார்.  இதேபோல், அண்ணனூர், சிவசக்தி நகர், 8வது தெருவை சேர்ந்தவர் விஜயசாரதி மனைவி பத்மஜாராணி(48).  நேற்று முன்தினம் பத்மஜாராணி  தோழியை பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்தார்.   வீட்டின் முன் கேட்டை திறந்தபோது , அவரது பின்னால் வந்த ஒரு சிறுவன் கழுத்தில் கிடந்த 2 சவரன்சங்கிலி பறித்து கொண்டு தப்பி ஓடினார். புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்….

The post 3 பெண்களிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chain ,Avadi ,Panneerselvam ,Sivagami Street ,Devi Nagar ,Annanur ,Lata ,
× RELATED அறந்தாங்கியில் நடந்து செல்லும்...