×

வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு-கலெக்டர் திறந்து வைத்தார்

பாப்பிரெட்டிப்பட்டி :  பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கள் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள முள்ளிக்காடு சேர்வராயன் மலை அடிவாரத்தில், 65 அடி உயரம் கொண்ட வாணியாறு அணை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கலெக்டர் திவ்யதர்சினி கலந்துகொண்டு தண்ணீர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அரூர் ஆர்டிஓ முத்தையன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தற்போது அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளான வெங்கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, ஓந்தியாம்பட்டி ஏரி, தென்கரைக்கோட்டை ஏரி மற்றும் பள்ளிப்பட்டி பெரிய ஏரி, அதிகாரப்பட்டி ஏரி, ஆகியவற்றுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 5 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்த தண்ணீர் செல்லும். அதன் பிறகு இடதுபுற, வலதுபுற கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்படும். இடதுபுறம் கால்வாய் மூலம் வெங்கட சமுத்திரம், மோளையானூர், மெணசி பூதநத்தம், ஆலாபுரம் ஆகிய பகுதி விவசாயிகளும், வலதுபுற கால்வாய் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளும் பயன் பெறுவர்….

The post வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு-கலெக்டர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Vaniyaru dam ,Papriprettipatti ,Dinakaran ,
× RELATED மது விற்றவர் கைது