×

பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூரில் இன்று ஸ்ரீகாருடைய அய்யனார், ஸ்ரீவீரனார் கோயில் திருக்குடமுழுக்கு விழா-43 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஸ்ரீகாருடைய அய்யனார், ஸ்ரீவீரனார் கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் கடந்த 1979ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் காருடைய அய்யனார், வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது. இதனையொட்டி கடந்த 6ம் தேதி காலை விநாயகர் வழிபாடும், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியும், 7ம் தேதி காலை சாந்தி ஹோமம், மாலை கிராம சாந்தியும், 8ம் தேதி காலை மூர்த்தி ஹோமம், மாலையில் முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் பூஜையை தொடங்கி வைத்தார்.9ம் தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று (வெள்ளி) காலை 6 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜையும், 8.30 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பட்டு 9.30 மணிக்கு விமான மஹா குடமுழுக்கும், காலை 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்பி ரவளிபிரியா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை ஆலத்தூர் கிராம வாசிகள் மற்றும் வெளிநாடுவாழ் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்….

The post பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூரில் இன்று ஸ்ரீகாருடைய அய்யனார், ஸ்ரீவீரனார் கோயில் திருக்குடமுழுக்கு விழா-43 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Srikar ,Ayyanar, Sriveeranar temple ,Alatur ,Pattukottai ,Aladhur village ,Srikara ,Ayyanar ,Sriveeranar temple ,Srikar's Ayyanar, Sriveeranar Temple Consecration Ceremony ,Aalatur ,
× RELATED ஆலத்தூர் தாலுகாவில் பலத்த மழை