×

கருப்பு சோளம் விளைச்சல் ‘ஜோரு’-அறுவடை பணிகள் தீவிரம்

சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. ஒருசில கிராமங்களில் வெள்ளைச்சோளம், கருப்பு சோளம், சிவப்புச்சோளம் எனப்படும் இரும்பு சோளப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தையன்கோட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கருப்பு சோளப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.தற்போது இப்பகுதியில் கருப்பு சோளப்பயிர்கள் நன்கு விளைந்துள்ளன. இதனையடுத்து அவற்றை அறுவடை செய்து களத்திலும், தார்ச்சாலைகளிலும் விவசாயிகள் உலர்த்தி வருகின்றனர். கடந்தாண்டு 1 கிலோ இரும்புச் சோளப்பயிர் ரூ.30க்கு விற்கப்பட்டது. தற்போது 1 கிலோ ரூ.40க்கு விலைபோகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி சேடபட்டி ராசுக்குட்டி கூறுகையில், ‘‘மற்ற பயிர்களை எந்த மாதத்திலும் பயிரிடலாம். ஆனால் கருப்பு சோளத்தை ஆடிப்பட்டத்தில் தான் பயிரிட முடியும். தமிழகத்தில் 3 பகுதிகளில் மட்டும்தான் இந்த கருப்புநிற சோளப்பயிர்கள் பயிரிடப்படுகிறது’’ என்றார்….

The post கருப்பு சோளம் விளைச்சல் ‘ஜோரு’-அறுவடை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Zoru ,Dindigul district ,Dinakaran ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...