×

புதுக்கோட்டை புதுப்பட்டியில் முடிதிருத்தும் நிலையத்தில் சாதி பாகுபாடா?: கோட்டாட்சியர் நேரில் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியில் முடிதிருத்துவதில் சாதி பாகுபாடு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், புதுப்பட்டி கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 150 குடும்பங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள். புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக 3 முடி திருத்தும் நிலையங்களும், ஒரு சலவை நிலையமும் உள்ளது. ஆனால், இங்கு செயல்படும் முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வது இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அது உண்மையாய் இருப்பின் மிகப்பெரிய பிரச்சனை. குறிப்பிட்ட சமூகத்திற்கு என பிரத்யேகமான முடி திருத்தும் நிலையம் உள்ளதா? ஏன் இதுபோன்ற பாகுபாடு உள்ளது? என சரமாரி கேள்விகளை எழுப்பி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியில் முடிதிருத்துவதில் சாதி பாகுபாடு உள்ளதா? என்று கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பட்டி கிராம மக்கள், முடி திருத்தும் நிலைய உரிமையாளரிடம் கோட்டாட்சியர் அபிநயா நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பட்டியலின மக்களுக்கு சலவை செய்யவும் மறுப்பதாக புகார் எழுந்ததால் அதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். அடுத்தடுத்து பட்டியலின மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அந்த கிராமத்தின் பிரதிநிதிகள், வழக்கு தொடர்ந்த செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார். அதுமட்டுமின்றி கருமக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், வி.ஏ.ஓ.ராஜகுமாரி, கிராம நிர்வாக உதவியாளர் லட்சுமி ஆகியோரிடம் கோட்டாட்சியர் அபிநயா விசாரணை மேற்கொள்ளவிருக்கிறார்….

The post புதுக்கோட்டை புதுப்பட்டியில் முடிதிருத்தும் நிலையத்தில் சாதி பாகுபாடா?: கோட்டாட்சியர் நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Puduppatti ,Shop ,Kotaksiyar ,Pudukottai Pudupatti Barber Shop ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...