×

சென்னை, காஞ்சிபுரம், தாம்பரத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அதிமுக சாதனையை மக்களிடம் கூறுங்கள்: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சென்னை:  மதுரவாயல் வானகரம் தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய  இடங்களில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:மக்களிடம் அதிமு கவின் சாதனைகளை கூறுங்கள்.  அதிமுகவில் அதிக முறை தேர்தலில் நின்ற வேட்பாளர் நான். 3 முறை நாடாளுமன்றம், 7 முறை சட்ட மன்ற உறுப்பினராக போட்டியிட்டேன். அரசியலில் படிப்படியாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என்றார். பிரசாரத்தின்போது, முன்னாள் அமைச்சர் பென்ஜமின், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக  கூட்டம் செவிலிமேடு பகுதியில் நடந்தது. மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம்  தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்எல்ஏ  வாலாஜாபாத் கணேசன் முன்னிலை வகித்தனர். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட அம்மா உணவகங்களை மூடப்பார்க்கிறார்கள். அதிமுகவை  மிரட்டி பணிய வைத்து வெற்றி பெற்று விட முடியாது. மக்கள் சக்தியோடு தான்  வெல்ல வேண்டுமே தவிர, குறுக்கு வழியில் வெற்றி பெறக்கூடாது. அதிமுக  எப்போதும் குறுக்கு வழியில் வென்றதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிமுக தேர்தல் பிரசார கூட்டம் நேற்று காலை தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில், கேம்ப் ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: இந்த தேர்தலில் சிலருக்கு சீட் கிடைத்து இருக்கும். சிலருக்கு சீட் கிடைக்காமல் இருக்கும். சீட் கிடைக்காதவர்கள் மன வருத்தத்தில் இருப்பீர்கள். எனக்கும் கூட சீட் கிடைக்காதபோது அந்த வருத்தம் இருந்து இருக்கிறது. ஆனால், நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்றார்….

The post சென்னை, காஞ்சிபுரம், தாம்பரத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அதிமுக சாதனையை மக்களிடம் கூறுங்கள்: எடப்பாடி பழனிசாமி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Chennai, ,Kanchipuram ,Dambaram ,Edappadi Palanisamy Prasaram ,Chennai ,Maduravayal Ganagaram Private Hallway ,Thambarat ,Edapadi Palanisamy Prasaram ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...