×

குறளோவியம் திருக்குறள் மேசை நாட்காட்டி புத்தகம் விற்பனை: அரசு அறிவிப்பு

சென்னை: குறளோவியம் திருக்குறள் மேசை நாட்காட்டிப் புத்தகம் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: திருக்குறளை இளைய தலைமுறையினரிடத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம், தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பங்கேற்ற,  குறளோவியம் என்ற தலைப்பில் மாநில அளவிலான ஓவியப் போட்டியை தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தியது.மாநிலம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 12 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் திருக்குறள் கருத்தை மையப்படுத்திய சிறப்பான‌ 365 ஓவியங்களை தெரிவு செய்து, திருக்குறள் மேசை நாட்காட்டிப் புத்தகத்தை தமிழ் இணையக் கல்விக்கழகம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. நாட்காட்டிப் புத்தகம் தேவைப்படுவோர் சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புத்தக விற்பனை மையங்கள் செயல்படும் பள்ளிக் கல்வித் துறை வளாகம், நுங்கம்பாக்கம் மற்றும் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம் மற்றும் கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் (தொலைபேசி எண் 044 2220 9400) ஆகிய இடங்களில் நேரிலும் வாங்கிக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு முனைவர் சிங்காரவேலன், ஆய்வு வளமையரை +91 86104 67558 என்ற எண்ணில்  வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post குறளோவியம் திருக்குறள் மேசை நாட்காட்டி புத்தகம் விற்பனை: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...