×

மாணவர்கள் மத்தியில் விஷச்சுவர் கமல் கண்டனம்

சென்னை: கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய கல்வி இயக்குனரகம் தடை விதித்தது. இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்து இந்துத்துவா ஆதரவு மாணவர்கள் காவி அணிந்து போராடி வருகின்றனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் நேற்று கூறியிருப்பதாவது:கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது….

The post மாணவர்கள் மத்தியில் விஷச்சுவர் கமல் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Vishachuvar Kamal ,CHENNAI ,Directorate of Education ,Udupi district ,Karnataka ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...