×

சீனியர் மாஜி அமைச்சர் தேனிகாரருக்கு சேவகம் செய்த விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைகட்சியின் எம்ஜிஆர் காலத்து மாஜி, தேனிகாரருக்கு சேவகம் செய்து புல்லரிக்க வச்சாராமே..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஆமா.. அந்த விஷயம்தான் இப்போ சர்ச்சையாகி இருக்கு. மாங்கனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இலைகட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வெகுஜோராக நடந்துச்சு. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தேனிகாரர் வந்ததால் வழக்கம் போல் சரக்கு வண்டியில் பணம் கொடுத்து ஆட்களை ஏத்திக்கிட்டு போய் கூட்டத்தை காட்டினாங்க. இது ஒருபுறமிருக்க தேனிகாரர் இருந்த மேடையில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் சாரை சாரையாக ஏறிக்கிட்டாங்க. இதனால் கொரோனா பரவுமோ என்ற பீதியில் முக்கிய நிர்வாகிகள் கிலியுடன் இருந்தாங்க. இந்தநேரத்தில் மேடையில் இருந்த மூத்த தலையான எம்ஜிஆர் காலத்து பொன்னான மாஜி, மாஸ்க் போட்டுக்கிட்டு  அதுக்கு மேல முகத்தை மூடும் கண்ணாடியையும் போட்டுக்கிட்டு உட்காந்தாரு. மொத்த கூட்டமும் அவரை பாத்துக்கிட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல திடீர்னு எழுந்த பொன்னானவர், தேனிகாரரின் உட்காரப்போகும் இருக்கைக்கு சானிடைசர் ஸ்பிரேயை அடிச்சு விட்டாரு. அதோட பேசும் மைக் ஸ்டேண்டிற்கும் மருந்து அடிச்சாரு. அப்புறம் தனது கைகளுக்கு சானிடைசரை அடிச்சவரு, பேசுக்கும் கொஞ்சம் பூசிக்கிட்டாராம். அதுக்கு அப்புறம், அப்படியே பவ்யமாக தேனிகாரரின் பக்கத்துல உக்காந்து கிட்டாராம். மூன்றெழுத்து தலைவருக்கும், மம்மிக்கும் அவ்வளவு நெருக்கமான சீனியரு, தேனிகாரருக்கு இப்படி சேவகம் பண்றாரேன்னு ரத்தத்தின் ரத்தங்கள் நொந்துகிட்டாங்களாம். ஆனால் ஒரு தரப்போ, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கூலாக இருந்தாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘முறைகேடு தொடர்பாக போட்டு கொடுத்ததால் அதிகாரி மீது தாக்குதல் நடந்ததாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடந்த 10 ஆண்டுகளாக நடந்த இலை கட்சி ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் அதிகாரிகளின் முறைகேடு கொடிக்கட்டி பறந்தது. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறையில் தான் அதிக முறைகேடு நடந்ததாம். காரணம், அதில் அதிகாரிகளின் கைதான் ஓங்கியிருந்ததாம். குயின்பேட்டை மாவட்டத்தில் பெரிய ஏரி அமைந்த ஒன்றியத்தில் 2019-20, 2020-21ம் நிதி ஆண்டுகளின் தணிக்கை நடந்ததாம். அதில் பொது நிதி கணக்கில் இருந்து பெருமளவு நிதி பல்வேறு போலி கணக்குகளுக்கு மாற்றி ஏப்பம் விடப்பட்டது தெரிய வந்தது. குறிப்பாக, 2019-20ல் பொதுநிதி கணக்கு 1ல் இருந்து ரூ.6.75 லட்சம் முறைகேடு நடந்தது தணிக்கையில் தெரிய வந்தது. 2020-21 தணிக்கை இன்னும் முடியவில்லையாம். அதில் இன்னும் அதிகம் இருக்கும் என்பது தகவல். இது தெரிந்ததும் அப்போது அங்கு பொறுப்பில்  இருந்த திருப்பதி ஆண்டவனின் பெயரை கொண்டவர் நீண்ட விடுப்பு எடுத்து சென்று விட்டாராம். அவர் ஏற்கனவே 2020ம் ஆண்டே ஓய்வு பெற வேண்டியவராம். 2 ஆண்டு காலநீட்டிப்பு முடிந்து தற்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ளாராம். ஆனாலும்  இவ்விஷயத்தில் தங்களை போட்டு கொடுத்தது டெபுடியான அலுவலர்தான், அவருக்கு  சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று, முறைகேட்டில் தனக்கு ஒத்தூதிய பிரபல அண்ணன் கட்சி பிரமுகராகவும் ஒன்றிய கணக்காளராகவும் உள்ள அதே திருப்பதி ஆண்டவனின் மற்றொரு பெயரை கொண்டவரிடம், கொந்தளித்தாராம். அதற்கேற்ப டெபுடியானவர் சில நாட்களுக்கு முன்பு அலுவலகம் வரும்போது 4 பேர் அவரை சரமாரியாக தாக்கினார்களாம். இதில் அவரது தோள்பட்டையில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளாராம். தற்போது இந்த பிரச்னை ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாம். காரணம் கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்தியது அண்ணன் கட்சியை சேர்ந்தவர் என்பதுடன், சங்க  பொறுப்பிலும் உள்ளதுதானாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆட்டம் போடுகிறாராமே பெண் விஏஓ… என்ன சேதி..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘கோவை அனுப்பர்பாளையத்தை சேர்ந்த நான்கெழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் கிராம நிர்வாக அலுவலர்  தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறாராம். உயரதிகாரிகள் எந்த வேலை சொன்னாலும் செய்வதில்லையாம்.பல்வேறு வகையான சான்றிதழ் கோரி இந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வரும் மக்களை வெளியே நிற்க வைத்து விடுகிறார். விட்டமின் சி கொடுத்தால் மட்டும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்கிறார். நோ மணி, நோ வொர்க் என்பதுதான் இவரது பாலிசியாம். இவர் கடந்த இலைக்கட்சி ஆட்சியில்  உச்சத்தில் இருந்தது போலவே இப்போதும் கணக்கு போட்டு செயல்படுகிறார். அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற  கோரிக்கை வலுத்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா.     …

The post சீனியர் மாஜி அமைச்சர் தேனிகாரருக்கு சேவகம் செய்த விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thenikar ,Peter ,MGR ,Leaf Party ,Thenikaran ,
× RELATED குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம்...