×

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த இளம்பெண் பலி: தற்கொலைக்கு தூண்டிய கணவர், மாமனாரை கைது செய்யக்கோரி சாலை மறியல்!!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்ணை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய கணவர், மாமனார் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும், உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிலா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கன்னிலாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கன்னிலா கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர், கன்னிலாவின் உடல் அவரது சொந்த ஊரான உதயநத்தத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அணைக்குடம் கிராமத்திற்கு அருகே சென்ற அமரர் ஊர்தியை மறித்து, கன்னிலாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கன்னிலாவின் கணவர் மற்றும் மாமனார், மாமியாரை கைது செய்ய வலியுறுத்தியும், உரிய விசாரணை நடத்த கோரியும் கோஷமிட்டனர்.            …

The post வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த இளம்பெண் பலி: தற்கொலைக்கு தூண்டிய கணவர், மாமனாரை கைது செய்யக்கோரி சாலை மறியல்!!! appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Maamanar Intar ,Jayangondam, Ariyalur district ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு பலி