×

முத்தக்காட்சியில் நடித்த ஸ்மிருதி வெங்கட்

ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.புகழ், ஈடன் இணைந்து தயாரிக்க, ‘தேஜாவு’ படத்தின் இயக்குனர் அரவிந்த் நிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் ஜோடி சேர்ந்துள்ள படம், ‘தருணம்’. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் சென்னையில் தொடங்கியது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ‘தேஜாவு’ படத்தில் திரில்லர் கதையை இயக்கிய அரவிந்த் நிவாசன், இதில் இதயத்தை வருடும் மென்மையான காதல் கதையை இயக்குகிறார்.

‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் அறிமுகமான கிஷன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவரும், ஸ்மிருதி வெங்கட்டும் நடித்த முத்தக்காட்சி போட்ேடா சமீபத்தில் வைரலானது. ஆர்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது. முக்கிய வேடங்களில் ராஜ் அய்யப்பன், பாலசரவணன் நடிக்கின்றனர். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, காமெடி நடிகர் மற்றும் ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் இயக்குனர் தர்புகா சிவா இசை அமைக்கிறார்.

The post முத்தக்காட்சியில் நடித்த ஸ்மிருதி வெங்கட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Smriti Venkat ,Muthakasshi ,Zen Studios ,A.A. Fame ,Eden ,Dejavu ,Arvind Nivasan ,Kishan Das ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர்