×

விதிமுறை மீறல் பெண் நீதிபதி சஸ்பெண்ட்

கோவை: கோவை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருபவர் உமாராணி. இவர் கடந்த 2016 முதல் கடந்த 2018 வரை கோவை 2-வது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். அப்போது, அவர் ஐகோர்ட்டில் முறையாக அனுமதி பெறாமல் வீடு கட்டியது, அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறுதல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை ஐகோர்ட் விசாரணை நடத்தி வந்தது. அதில் ஐகோர்ட்டில் முறையாக அனுமதி பெறாமல் வீடு கட்டியது, அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறுதல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற செயல்களுக்காக கடந்த மாதம் 27ம் தேதி இவரை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. நன்னடத்தை விதிகளின்படி நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post விதிமுறை மீறல் பெண் நீதிபதி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Umarani ,Permanent People's Court of Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...