×

4 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை

சென்னை: 4 மாவட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கே.மாதவராமானுஜம், மணிமாளிகை எம்.கணேசன், செ.பாலசுப்பிரமணியன், பி.விஜி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த என்.கரிகாலன்(எ)ரமேஷ், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நகர செயலாளர் எம்.அங்குசாமி, டி.ஆர்.சீனிவாசன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம், எம்.கெபீர், உடுமலைப்பேட்டை நகர் 10வது வார்டு செயலாளர் கே.குமரேசன் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post 4 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : OPS ,Edabadi ,Chennai ,Edappadi ,O. Bannir ,Dinakaran ,
× RELATED செண்பகத்தோப்பு குலதெய்வம் கோயிலில்...