×

141வது வார்டு குடிசை மாற்று வாரிய பகுதியில் நவீன வசதிகளுடன் புதிய குடியிருப்பு: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் வாக்குறுதி

சென்னை: சென்னை மாநகராட்சி, 141வது வார்டில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், தி.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளான காமராஜர் காலனி மற்றும் லலிதாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக வரவேற்பளித்து, தங்களது ஆதரவினை தெரிவித்தனர். அப்போது, ராஜா அன்பழகன், ‘‘மழை காலங்களில் இங்குள்ள தெருக்களில் தண்ணீர் தேங்காமல், வெளியேறும் வகையில் வடிகால் அமைக்கப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தரப்படும். பெண்களுக்கு சுய தொழில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இங்குள்ள பழைய குடியிருப்பு கட்டிடங்களை இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும். எனவே, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, கோ.உதயசூரியன், வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், எல்.வீரப்பன், எஸ்.ராமலிங்கம் மற்றும் திமுக முன்னோடிகள், நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

The post 141வது வார்டு குடிசை மாற்று வாரிய பகுதியில் நவீன வசதிகளுடன் புதிய குடியிருப்பு: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : 141st Ward Cottage Alternative Board ,Kanjagam ,Raja Anpadhagan ,Chennai ,Raja Anandhagan ,Dizhagam ,Chennai Corporation ,141st Ward ,Chennai Progressive Alliance ,141st Ward Cottage ,Board ,Kazhagam ,Raja Amanakadan ,
× RELATED தமிழ்ப்பற்றில் தீவிரமாக தன்னை...