×

சார்லஸ் என்டர்ப்ரைசஸ் – திரை விமர்சனம்

மலையாளத்தில் வரவேற்பு பெற்ற இப்படம், சில மாற்றங்களுடன் அதே பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. விநாயகர் சிலை திருட்டு என்பது ஒரு ஜாலியான திருட்டாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் பின்னணியில் காமெடி, சென்டிமெண்ட் கலந்து இப்படத்தை வழங்கியுள்ளார், இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம். தனது கணவர் குரு சோமசுந்தரத்தைப் பிரிந்து வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஊர்வசிக்கு அளவுக்கு அதிகமான கடவுள் பக்தி. அவரது மகன் பாலு வர்கீசுக்கு மாலைக்கண் வியாதி. தனியார் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவரது கண் பிரச்னையால் வேலைக்கும் சரியாகச் செல்ல முடியவில்லை, திருமணத்துக்கும் பெண் அமையாமல் தள்ளிப்போகிறது. தோட்டத்து தென்னை மரத்தில் கிடைத்ததாகச் சொல்லி அவரது தந்தை ஊர்வசிக்கு பிள்ளையார் சிலை கொடுக்கிறார்.

உண்மையில் அது பல கோடி ரூபாய் மதிப்புள்ள அபூர்வசிலை. புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் இருக்கும் பாலு வர்கீஸ், தன் வீட்டிலுள்ள சிலையைத் திருடி விற்க முடிவு செய்கிறார். அதற்கு பிக்பாக்கெட் திருடன் சார்லஸ் (கலையரசன்) உதவ முன்வருகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ஒரு குடும்பத்திலுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு பிள்ளையார் சிலை எப்படி தீர்வு சொல்கிறது என்பதை காமெடியாகச் சொல்லியிருக்கின்றனர். அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். மலையாளப் படத்தை அப்படியே டப்பிங் செய்யாமல், தமிழுக்காக புதிய காட்சிகளைச் சேர்த்து தமிழ்ப் படமாக அளித்துள்ளனர். கதை ஒரே இடத்தில் சுற்றுவதால், படம் மெதுவாக நகர்கிறது.

The post சார்லஸ் என்டர்ப்ரைசஸ் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dieger ,Subash Lalita ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிறகன் விமர்சனம்