×

தன்னை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்ட மாணவர்களுக்கு தனி ஒரு மாணவியாக பதிலடி : துணிச்சலை பாராட்டி ரூ. 5 லட்சம் பரிசு!!

பெங்களூரு: கர்நாடக கடலோர பகுதியில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையில் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் காவி சால்வை அணிவோம் என்று சில கல்லூரிகளில் காவி சால்வை அணிந்து மாணவர்கள் வந்தனர்.கடலோர பகுதியில் தொடங்கிய சீருடை பிரச்னை நேற்று பாகல்கோட்டை, பெலகாவி, கோலார், குடகு, சாம்ராஜ்நகர், மண்டியா, தாவணகெரே, சிக்கமகளூரு, ஹாசன், யாதகிரி, கலபுர்கி என பெரும்பான்மையான மாவட்டங்களில் பரவியது. இந்த நிலையில், மாண்டியா நகரில் பி.ஈ.எஸ். கல்லூரியில் நுழைவு வாயிலில் மாணவர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது, ஹிஜாப் அணிந்து தனியாக வந்த மாணவியை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என மாணவர்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சூழ்ந்து நின்ற மாணவர்களை சிறிதும் அச்சமின்றி தனி நபராக எதிர்கொண்ட அந்த மாணவி அல்லா ஹூ அக்பர் என்று பதில் முழக்கமிட்டார். இதையடுத்து அந்த பெண்ணை விரைந்து வந்து கல்லூரி விரிவுரையாளர்கள் அழைத்து சென்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த நிலையில் மாணவியின் துணிச்சலை பாராட்டி  Jamiatul Ulema-e-Hind அமைப்பின் தலைவர் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனிடையே கல்லூரி வகுப்பறைக்குள் மாணவர்கள் காவி துண்டுடன் கும்பலாக நுழைந்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் தரும் வகையில் நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மாணவர் கும்பலை கண்டு ஆசிரியர் கதவை தாழிட்டு வைத்து இருந்த நிலையில், வெளியே இருந்து கதவை தட்டி திறக்க செய்த மாணவர்கள் வகுப்பறைக்குள் உள்ளே நுழைந்து கூச்சலிட்டனர். …

The post தன்னை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்ட மாணவர்களுக்கு தனி ஒரு மாணவியாக பதிலடி : துணிச்சலை பாராட்டி ரூ. 5 லட்சம் பரிசு!! appeared first on Dinakaran.

Tags : Jaisreeram ,Bengaluru ,Udupi district ,Karnataka ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு...