×

சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு

காளையார்கோவில் : காளையார்கோவில் பேருந்து நிலையத்தை சுற்றிலும் இருசக்கர வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பொதுமக்கள் சாலை விபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சொர்ணகாளீஸ்வரர் ஆலயம் செல்லும் இரண்டு வழிகளிலும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முதல் அப்பகுதிகளில் உள்ள வீடுகள், மருத்துவமனை, அலுவலகங்களுக்கு செல்லும் பொது மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனால் அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது.சில மாதங்களுக்கு முன் காவல் துறையினர் வியாபார கடைகளுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு கயிறுகளை ரோட்டில் பதித்தனர். கயிறுக்கு வெளியே யாரும் வாகனங்களை நிறுத்தக்கூடாது, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்று காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டது. சிலகாலம் மட்டுமே விதிமுறை நடைமுறையில் இருந்தது. காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் தற்போது பேருந்து நிலையம் முழுவதும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி வருகின்றார்கள். மீண்டும் காவல் துறையினர் பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு appeared first on Dinakaran.

Tags : Kallayargo ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?