×

அநீதி படத்தை வாங்கினார் ஷங்கர்

சென்னை: வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ம் தேதி வெளியாகிறது. ‘ஜெயில்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு முன்பே முடிந்துவிட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதமே இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால், திடீரென படம் தள்ளிப்போனது. இந்நிலையில், வரும் ஜூலை 21ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

The post அநீதி படத்தை வாங்கினார் ஷங்கர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shankar ,Chennai ,Vasanthapalan ,Arjun Das ,Tushara ,Arjun Chidambaram ,Vanitha Vijayakumar ,Aneethi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...