×

டிசம்பரில் முடிகிறது சூர்யாவின் கங்குவா

சென்னை: சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பரில் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது. கங்குவா ஷூட்டிங் நேற்று முதல் இவிபி ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. இதற்காக இங்கு மெகா செட் ஒன்று போடப்பட்டுள்ளது. அதில் குதிரைகள் ஓடி வர சூர்யா பங்கேற்கும் சண்டை காட்சி படமாக்கப்படுகிறது. இதற்காக 500 துணை நடிகர்கள் படப்பிடிப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து படக்குழுவினர் அடுத்த கட்டமாக மீண்டும் கொடைக்கானல் செல்கின்றனர். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த படம் சரித்திர காலகட்டம், இப்போதைய சமூக காலகட்டம் என இரண்டு பீரியட் வகை படமாக உருவாகிறது. இதனால் இரண்டுவித தோற்றத்தில் இதில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிவடையும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி இந்த படத்தின் ப்ரோமோ அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

The post டிசம்பரில் முடிகிறது சூர்யாவின் கங்குவா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Surya ,Leopard Shiva ,EVP ,Film ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்