×

வாலிபரை மீட்ட ராணுவத்துக்கு கேரள முதல்வர் நன்றி

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் விடுத்துள்ள அறிக்கை: செராடு மலையில் 2 நாளுக்கு மேலாக சிக்கி தவித்த வாலிபர் பாபு மீட்கப்பட்டுள்ளார். மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட், துணை ராணுவ வீரர்கள், மீட்பு பணியை ஒருங்கிணைத்த தென்பாரத பகுதி ராணுவ லெப்டினன் ஜெனரல் அருண் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அதேபோல் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட விமான படை, கடலோர காவல் படை, கேரள காவல்துறை, தீயணைப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, வனத்துறை, பாலக்காடு மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறை, மக்கள் பிரதிநிதிகள், ஊர்மக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாபுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

The post வாலிபரை மீட்ட ராணுவத்துக்கு கேரள முதல்வர் நன்றி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Valibar ,Thiruvananthapuram ,President ,Binarayi Vijayan ,Seradh mountain ,Wollibar ,Dinakaran ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா