×

பராமரிப்பு இல்லாத பொது கழிவறை: பொதுமக்கள் அவதி

சின்னாளபட்டி: சேடபட்டி லட்சுமிபுரத்தில் பொது கழிவறையை பயன்பாடு இல்லாத கழிவறையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடபட்டி லட்சுமிபுரத்தில் பெரிய பகவதியம்மன் கோயில் பகுதியில் பொதுக்கழிவறை உள்ளது. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கழிப்பறை கடந்த இரண்டு வருடங்களாக பூட்டியே கிடக்கிறது. கழிவறை பகுதியை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இரவு நேரங்களில் புதர்களிலிருந்து வெளியேறும் பாம்புகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, கழிவறையை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Tags : Chinnalapatti ,Sedapatti Lakshmipuram ,Sidthiankot Municipality ,Dindigul District ,Periya Bhagavatiyamman Temple ,
× RELATED சின்னாளபட்டி சாலையில் தேங்கும்...