×

குழாய் உடைப்பால் சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலையில் தண்ணீர் செல்கிறது.திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வேடர்புளியங்குளம் கிராமம் திருப்பரங்குன்றம் யூனியனுக்கு உட்பட்டது. இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. சாலையில் தண்ணீர் செல்வதால் வீடுகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டு பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதாகவும், மேலும் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து வீணாகும் தண்ணீரை வீடுகளுக்கு கொடுக்க ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்….

The post குழாய் உடைப்பால் சாலையில் வீணாக செல்லும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Tirupparankuram ,Tirupparankuntam ,Vedarbulliyangulam ,Thiruparanguntham ,
× RELATED மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய...