×

விகேபுரத்தில் இந்து முன்னணி பிரமுகரை தாக்க முயன்ற தலையாரி உள்பட 7 பேர் கைது

விகேபுரம் : விகேபுரம் டாணா அனவன்குடியிருப்பைச் சேர்ந்தவர் பால்ராஜ். இந்து முன்னணி பிரமுகரான இவரை கடந்த 3ம் தேதி ஒரு மர்ம கும்பல் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாக்க முயன்றதோடு அவரது செல்போனை பறித்துச் சென்றது.இதுகுறித்த புகாரை அடுத்து அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் பிறப்பித்த உத்தரவின்பேரில் விகேபுரம் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் எஸ்ஐக்கள் சிவதாணு, ஜெய்சங்கர், நேதாஜி உள்ளிட்ட போலீசார் மர்ம கும்பலை தீவிரமாகத் தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்திய போலீசார் விகேபுரம் கிராம காவலரான முத்துக்குமார், ஊர்க்காடு பாலசுப்பிரமணியன், நந்தன் தட்டை கதிர்வேல், முக்கூடல் இமானுவேல் பிரவீன், அம்பை பொத்தை சுரேஷ், வீரவநல்லூர் பார்த்திபன், பாப்பாக்குடி மகேஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கிராமக்காவலரான முத்துக்குமார் குறித்து பால்ராஜ் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தனது நண்பர்களை ஏவிவிட்டு பால்ராஜை மிரட்டல்  விடுத்து செல்போனையும் பறிக்க கூறினாராம். அதன்பேரிலேயே 6 பேரும் சேர்ந்து பால்ராஜை மிரட்டி செல்போனை பறித்ததுடன் அவரை தாக்கவும் முயற்சித்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்….

The post விகேபுரத்தில் இந்து முன்னணி பிரமுகரை தாக்க முயன்ற தலையாரி உள்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thalaiyar ,Vikepuram ,Balraj ,Dana Anavankudi ,Thaliyari ,
× RELATED மின் சிக்கனம், பாதுகாப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கல்