×

கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் காவலர் உடல் திறன் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்

புதுச்சேரி :  கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வரும் காவலர் உடல்திறன் தேர்வில் நேற்று பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.புதுச்சேரி, கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 19ம்தேதி காவலர் உடல் தகுதி, உடல் திறன் தேர்வு துவங்கியது. 2 வாரங்களை கடந்து இத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை ஆடவர்களுக்கான உடல்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர். இதில் 1,700 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.நேற்று மகளிருக்கான காவல் உடல் தகுதி, உடல்திறன் தேர்வுகள் துவங்கியது. கோவிட் ரேபிட் பரிசோதனை சான்றிதழ்களுடன் வந்திருந்தவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்த தேர்வுக் குழுவினர் அவர்களின் உயரம், எடை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மகளிருக்கு 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட உடல்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டன.முதல்நாளில் 400க்கும் மேற்பட்டோருக்கு அட்மிட் கார்டு அனுப்பப்பட்டிருந்தது. சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். பெண்களுக்கான தேர்வு நடைபெற்றதால் கூடுதலாக அங்கு 40 மகளிர் போலீசார் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அடுத்த 4 நாட்கள் தொடர்ந்து இத்தேர்வு நடத்தப்படும். 11ம்தேதிக்குபின் கோவிட் பாதித்து இத்தேர்வில் கலந்து கொள்ளாமல் உள்ள ஆடவர் மற்றும் மகளிருக்கு அடுத்தடுத்த நாட்களில் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு மொத்த நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு மார்ச் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிகிறது. இதில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு காவல்துறை தலைமையகம் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு உடனே காவலர் பணியில் நியமிக்கப்படுவர்….

The post கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் காவலர் உடல் திறன் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Korimedu Armed Forces Ground ,Puducherry ,Korimedu ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு