×

பிரபாஸ் படத்தில் ஆகஸ்ட் முதல் நடிக்கிறார் கமல்

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இதன் படப்பிப்பில் ஆகஸ்ட் மாதம் கமல் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் வெறும் 20 நாள் அவரது கால்ஷீட்டுக்காக ரூ.150 கோடி பேசப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றி கமல்ஹாசன் தரப்பில் விசாரித்தபோது, ‘பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மற்ற விவரங்கள் முடிவாகவில்லை’ என்றனர்.

The post பிரபாஸ் படத்தில் ஆகஸ்ட் முதல் நடிக்கிறார் கமல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : prabas ,Chennai ,Amitabh Bachchan ,Deepika Padukone ,Naag Aswin ,Kierthi Suresh ,Ban ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கலைஞர் 100 விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சனுக்கு அழைப்பு..!!