×

பாஜ, பாமக வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் சுணக்கம்

கள்ளக்குறிச்சி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜ, பாமக தனித்து போட்டியிடுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் பாஜ 11 வார்டுகளில் போட்டியிடுவதாக கட்சி தலைமை வேட்பாளர்கள் பெயர் பட்டியலை அறிவித்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட சிலர் தயக்கம் காட்டியதால் 7 வார்டுகளில் மட்டுமே வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து போட்டியிடுகின்றனர். மற்ற வார்டுகளில் ஆள் இல்லாததால் போட்டியிடவில்லை. பாமக 4 வார்டுகளில் மட்டுமே போட்டியிடுகிறது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியாக உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கின்ற போது பாஜ, பாமக நிர்வாகிகள் வைட்டமின் `ப’ எதிர்பார்ப்போடு தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். 2 கட்சிகளும் இப்போது தனித்து போட்டியிடுவதால் வேட்பாளர்களிடம் போதுமான வைட்டமின் `ப’இல்லை. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்காமல் நிர்வாகிகள், தொண்டர்கள் சுணக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்….

The post பாஜ, பாமக வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் சுணக்கம் appeared first on Dinakaran.

Tags : Baja ,Bamaka ,Kallakkurichi ,Kallakurichi Municipality ,Bambaka ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...