×

கொல்கத்தாவில் 2வது விமான நிலையம் அமைக்க நிலம் தரமறுக்கும் மம்தா பானர்ஜி: ஒன்றிய அமைச்சர் சிந்தியா குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொல்கத்தாவில் 2வது விமான நிலையம் அமைக்க  மேற்கு வங்க அரசு நிலம் ஒதுக்காமல் தாமதப்படுத்தி வருவதாக   ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா குற்றம் சாட்டினார். ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்இதனால் அங்கு 2வது விமான நிலையம் கட்ட வேண்டும் என்று கூறி மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பேசுவதற்கு நேரம் கேட்டு கடந்த 6 மாதமாக கடிதம் எழுதி வருகிறேன். மாநில அரசிடம் இருந்து இதுவரை உறுதியான எந்த பதிலும் வரவில்லை. தற்போது உள்ள விமான நிலைய  மேம்பாட்டுக்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 8,600 ஆகும். 10,000 ல் இருந்து 11,000 பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் மாநில அரசு ஒத்துழைப்பு அளித்து நிலம் வழங்கினால்தான் இப்பணிகள் நிறைவேறும். அதே போல் பாக்டோக்ரா விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு  நிலம் வழங்கக்கோரி மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.ஆனால் மாநில அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. மாநிலத்தின் மேம்பாடு குறித்து மம்தா பானர்ஜி கவலைப்படவில்லை. மாநில அரசு முன்வராமல் ஒன்றிய அரசால் தனித்தே இப்பணிகளை செய்ய இயலாது’’ என்றார். கொல்கத்தா விமான நிலைய இடநெருக்கடியை குறைக்கும் வகையில் புதிய விமானம் நிலையம் அமைப்பதற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்கார் உள்பட சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என மாநில அரசு அதிகாரி ஒருவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post கொல்கத்தாவில் 2வது விமான நிலையம் அமைக்க நிலம் தரமறுக்கும் மம்தா பானர்ஜி: ஒன்றிய அமைச்சர் சிந்தியா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Cynthia ,Mamta Panerjy ,Kolkata ,West Bengal Government ,Mamta Panerjey ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...